பல சர்ச்சைகளை கடந்து குடும்பத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் எங்கு சென்றுள்ளார் தெரியுமா... போட்டோ இதோ
ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் சினிமாவில் நாயகனாக, சாக்லெட் பாயாக வலம் வந்தவர்.
ஆரம்பத்தில் பல ஹிட் படங்களை கொடுத்தவருக்கு ஒருகட்டத்தில் வெற்றிப்பெற்ற படம் என்று கூறும் அளவிற்கு எந்த படமும் அமையவில்லை.
கடந்த வருடம் இவரது நடிப்பில் தினசரி, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ஆகிய படங்கள் வெளியாகின, ஆனால் தோல்வியில் முடிந்தது.
ஹீரோ அல்லாத கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கியவர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கினார்.
கடந்த ஜுன் 23ம் தேதி போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் பின் ஒருமாத சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
குடும்பம்
சிறையில் இருந்து வெளியே வந்தவர் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியிலும் தலைக்காட்டாமல் இருந்தார்.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று நடிகர் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.