நான் உயிருடன் நன்றாக இருக்கிறேன், கவலைப்பட ஒன்றும் இல்லை- 80களின் நாயகன் சுதாகர் வெளியிட்ட வீடியோ

By Yathrika May 27, 2023 10:00 AM GMT
Report

நடிகர் சுதாகர்

தமிழ் சினிமாவில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் சுதாகர். 80களில் சுருள் சுருள் முடி, வசீகரமான முகம் என தமிழக மக்களின் மனதை கவர்ந்து வந்தவர்.

கிழக்கே போகும் ரயில், கல்லுக்குள் ஈரம், சுவரில்லாத சித்திரங்கள், நிறத் மாறாத பூக்கள், மாந்தோப்பு கிளியே, எங்க ஊரு ராசாத்தி, பொண்ணு ஊருக்கு புதுசு என பல படங்களில் நடித்தார்.

இளையராஜா அவர் நடித்த பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்து அவருக்கு பெரிய மார்க்கெட்டை உருவாக்கி தந்தார் என்றே கூறலாம்.

நான் உயிருடன் நன்றாக இருக்கிறேன், கவலைப்பட ஒன்றும் இல்லை- 80களின் நாயகன் சுதாகர் வெளியிட்ட வீடியோ | Actor Sudhakar About His Health

தற்போதைய நிலை

நடிகர் சுதாகரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் திடீரென ஒரு வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே சுதாகர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அனைவருக்கும் வணக்கம், என்னைப் பற்றி நீங்கள் அனைவரும் படிக்கும் தகவல் தவறானது. நான் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். தயவு செய்து பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம்.

எதையும் உண்மை தெரியாமல் பகிரவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம்.. நான் உயிருடன் இருக்கிறேன். நன்றாக இருக்கிறேன். கவலைப்பட எதுவும் இல்லை என்று சுதாகர் கேட்டுக் கொண்டுள்ளார். 

நான் உயிருடன் நன்றாக இருக்கிறேன், கவலைப்பட ஒன்றும் இல்லை- 80களின் நாயகன் சுதாகர் வெளியிட்ட வீடியோ | Actor Sudhakar About His Health

2வது கணவருடன் சென்ற இளைய மகளின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட வனிதா- என்ன ஸ்பெஷல் பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US