சிவாஜி பட வில்லன் இறந்துவிட்டாரா? ஷாக் ஆன ரசிகர்கள்! நடிகர் தரப்பில் இருந்து வந்த பதில்
சுமன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் வில்லனாக நடித்து இருந்தவர் சுமன். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் அவர் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடிகராக இருந்து வருகிறார்.
படிக்காதவன், குருவி, ஏகன் மட்டுமின்றி சமீபத்தில் ரிலீஸ் ஆன லெஜண்ட் படம் வரை சுமன் நடித்த பல படங்கள் தற்போதைய தலைமுறையினருக்கும் பரிட்சயமானவை தான்.
இறந்துவிட்டாரா
சுமார் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என சில youtube சேனல்களில் சிலர் செய்தியை பரவவிட்டு இருக்கிறார்கள். அதை பார்த்து அதிர்ச்சி ஆன சுமன் 'நான் இன்னும் இறக்கவில்லை, உயிரோடு தான் இருக்கிறேன்' என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
பணத்திற்காக அப்படி youtubeல் தகவல் பரப்புகிறார்கள் என குற்றம்சாட்டும் அவர், செய்தி பரப்பிய சேனல் மீது வழக்கு போடபோவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
கோடிக்கணக்கில் எகிறிய விடுதலை படத்தின் பட்ஜெட் ! படத்தை கையில் எடுத்த முக்கிய தயாரிப்பு நிறுவனம்

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
