முதல் பட ரிலீசுக்கு முன்பே விபத்தில் ஒரு காலை இழந்த நடிகர்! ஷிவராஜ் குமாரின் உறவினர்
கன்னட நடிகர் சுராஜ் குமார் பைக் விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்து இருப்பது சினிமா துறையில் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஜூன் 24ம் தேதி அவர் ஊட்டியில் இருந்து மைசூருக்கு பைக்கில் சென்றிருக்கிறார். Mysuru-Gundlupet ஹைவே சாலையில் அவர் பைக் ஓட்டி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரி மீது மோதி இருக்கிறார்.
கால் நீக்கம்
நடிகர் சூரஜ் குமாரை உடனே மைசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரது வலது காலை நீக்கி இருக்கின்றனர். முட்டிக்கு கீழே அவரது கால் அதிகம் சேதமாகி இருந்ததால் நீக்கி இருக்கின்றனர்.
சூரஜ் குமார் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் குடும்ப உறவினர் என்பதால் அவரை மருத்துவமனைக்கு வந்து நடிகர் சிவ ராஜ்குமார் பார்த்திருக்கிறார்.
தற்போது பிரியா வாரியர் உடன் ஒரு படத்தில் அவர் நடித்து வந்தார். இந்த நிலையில் தான் விபத்தில் சிக்கி காலை இழந்திருக்கிறார்.
எனக்கு விஜயகாந்த்தை தான் பிடிக்கும்.. ஹிந்தி நடிகர் சோனு சூட் சொன்ன காரணம்

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
