சூர்யா நடிக்கப்போகும் அவரது 44வது படத்தின் நாயகி இவரா?- அதிகாரப்பூர்வமாக வந்த தகவல்
நடிகர் சூர்யா
சூரரைப் போற்று, ஜெய் பீம் என ஹிட் படங்களை கொடுத்து வந்த சூர்யா நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்பது கங்குவா படம் தான்.
சிவா இயக்கத்தில் படு பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படத்தின் ஃபஸ்ட் லுக், படப்பிடிப்பு காட்சிகள் என தான் வெளியானது.
அடுத்த படம்

இந்த படத்தை முடித்த கையோடு அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்பட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் அந்தமானில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக நாயகி குறித்து வெளியிட்டுள்ளனர்.
A killer on screen! Delighted to have the dazzling diva @hegdepooja with us for #Suriya44 ?
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) June 1, 2024
Welcome onboard #PoojaHegde ??#LoveLaughterWar ❤️? #AKarthikSubbarajPadam?️@Suriya_Offl @karthiksubbaraj @Music_Santhosh @rajsekarpandian @kaarthekeyens @kshreyaas @cheps911… pic.twitter.com/T7hJMFeTQF