தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்கிறாரா மதுரை முத்து- அவரது மனைவி போட்ட பகீர் தகவல்
மதுரை முத்து
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டான்ட்அப் காமெடி செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மதுரை முத்து.
அந்நிகழ்ச்சிக்கு பிறகு சன் டிவியில் அசத்தப்போவது யாரு, சன்டே கலாட்டா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேலும் விஜய் டிவி பக்கமே வந்தவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகள், சில சீரியல்களிலும் நடித்தார்.
குடும்பம்
மதுரை முத்துவின் மனைவி லேகா 2016ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதன்பின் சில மாதத்தில் மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை மதுரை முத்து மறுமணம் செய்தார்.
வயதான பெற்றோர் மற்றும் 2 மகள்கள் இருக்கிறார்கள், அவர்களுக்காக மறுமணம் செய்தேன் என முத்து திருமணம் குறித்து பேசியிருந்தார். இந்த நிலையில் அவரது இரண்டாவது மனைவி நீது தனது இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எனக்கு என்று ஒரு உயிர் வேண்டும், அது என்னை மட்டுமே நேசிக்க வேண்டும்.
ரஜினியின் முக்கிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகை- என்ன படம் தெரியுமா?
அவருக்காகவே நான் பொட்டு வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் ஏமாந்து போய்க்கொண்டே இருக்கிறேன் என்று அழுதபடி பதிவிட்டிருந்தார்.
இப்படி தொடர்ந்து சோகமான வீடியோவை வெளியிடுவதால் அவருக்கும் முத்துவிற்கும் ஏதாவது பிரச்சனையா, பிரிந்துவிட்டார்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.