நடிகர் சூர்யாவின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சூர்யா
தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு ரெட்ரோ திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. சில கலவையான விமர்சனங்களும் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு வெளிவரும் என கூறுகின்றனர். இதன்பின், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 46வது திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சூர்யாவின் வீடு
நடிகர் சூர்யா ECR-ல் புதிதாக வீடு கட்டி வருவதாக தகவல் ஒன்று ஏற்கனவே வெளிவந்தது. இது தனது மனைவிக்காக அவர் கட்டும் வீடு என்கின்றனர்.
சூர்யாவுக்கு சென்னை தியாகராய நகரில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டிற்கு லட்சுமி இல்லம் என பெயர் உள்ளது. தனது தாயின் பெயரைதான் இந்த வீட்டிற்கு சூர்யா வைத்துள்ளார்.
இந்நிலையில், பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் விலை மதிப்பு மட்டுமே ரூ. 45 கோடி - ரூ. 50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.