தேசிய விருது பெறும் நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் சூர்யாவும் அவரது ரசிகர்களும் இப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
காரணம் நேற்று வந்த தேசிய விருது அறிவிப்பு தான். சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூரரைப் போற்று படத்திற்காக கிடைத்துள்ளது.
அதோடு சூரரைப் போற்று படம் 5 தேசிய விருதுகளை பெற இருக்கிறது. சூர்யாவிற்கு இன்று பிறந்தநாள், தேசிய விருது கொண்டாட்டத்தோடு, பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
இன்று மாலை அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக 5.30 மணியளவில் வாடிவாசல் படத்திற்காக சூர்யா மாடு பிடிக்கும் பயிற்சியின் போது எடுத்த வீடியோ வெளியாக இருக்கிறது, அதற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
சூர்யா சொத்து மதிப்பு
வெற்றிநாயகனாக தற்போது தமிழ் சினிமாவில் வலம் வரும் சூர்யா பலருக்கு படிப்பிற்காக உதவிகள் செய்கிறார். அப்படி நிறைய நல்ல விஷயங்களை செய்து வரும் நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 250 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
8 நாள் முடிவில் உலகம் முழுவதும் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல்?