இன்று மறுமணம்.. மனைவி குறித்து முதன்முறையாக மனம் திறந்த நாக சைதன்யா
நாக சைதன்யா
தெலுங்கு திரையுலகில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகர்ஜுனா. இவருடைய மூத்த மகன் நாக சைதன்யா, தெலுங்கில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஜோஷ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
ஆனால், இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த படம் என்றால் அது Ye Maaya Chesave.
இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு 4 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

தற்போது தனது மருமணத்திற்கு ரெடியான நாக சைதன்யா இன்று சோபிதாவை திருமணம் செய்து கொள்ள போகிறார். இந்நிலையில், தனது மனைவி சோபிதா குறித்தும் அவரது திருமணம் குறித்தும் முதன் முறையாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நாக சைதன்யா பேட்டி
அதில், " சோபிதா துலிபாலா என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். அவருடன் சேர்ந்து ஒரு புது வாழ்க்கையை நான் தொடங்க உள்ளேன். அதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இது ஒரு அற்புதமான பயணமாக இருக்கும். ஹைதராபாத்தில் இருக்கும் அன்னப்பூர்ணா ஸ்டூடியோஸில் எங்களது திருமணம் நடக்கவிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri