அனிருத்துக்கு இப்படியொரு பரிசு கொடுத்து அசத்திய விஜய்!.. என்ன பாருங்க?
விஜய் தேவரகொண்டா
தெலுங்கில் ரவி பாபு இயக்கிய நுவ்விலா படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. துணை நடிகராக இருந்த இவர் கடந்த 2016ம் ஆண்டு பெல்லி சூப்புலு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.
இப்படம் வெற்றியடைய அடுத்து விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் நடித்தார். படம் பிரம்மாண்ட வெற்றியடைந்து தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக்கும் ஆனது.
பின் அடுத்தடுத்து படங்கள் நடித்து ஹிட் அடிக்க ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். தற்போது 'கிங்டம்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்த இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாக உள்ளது.
என்ன பாருங்க?
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா அனிருத்துக்கு சிறப்பு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது, தனது ரவுடி பிராண்ட் டீ ஷர்ட்டையும், பேட்மிண்டன் மட்டையையும் அனிருத்துக்கு பரிசளித்துள்ளார்.

கமல் கன்னட மொழி சர்ச்சை; தமிழக முதல்வரின் கள்ள மௌனம் தமிழுக்கே அவமானம் - சீமான் கண்டனம் IBC Tamilnadu
