பிரியாணி மட்டும் இல்ல, வேறு அசைவ உணவுகளையும் நடிகர் விஜய் விரும்பி சாப்பிடுவாராம்.. அது என்ன உணவு தெரியுமா
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது Greatest of All Time திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாபெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபல திரையுலக நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். புத்தான்டு, பொங்கல் என தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கு Greatest of All Time படத்தின் அப்டேட் வெளிவந்துகொண்டே இருக்கிறது. அடுத்ததாக இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்க்கு பிடித்த அசைவ உணவு
நடிகர் விஜய் அசைவ விரும்பி ஆவார். இதை பற்றி அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தினமும் தன்னுடைய உணவில் அசைவம் வேண்டும் என விரும்புவாராம். வீட்டில் செய்யாத நாட்களில் படப்பிடிப்பில் அசைவம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இப்படி தினமும் அசைவம் சாப்பிடுபவராக இருந்தாலும், அதை அளவாக வைத்துள்ளார் விஜய். 50 வயதை நெருங்கியும் தற்போது கூட அவர் இளமையாக இருக்க இதுவே காரணமாக இருக்கிறது என்கின்றனர்.

பிரபல 40 வயது நடிகைக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள நெக்லஸ் வாங்கி கொடுத்தாரா விஜய்.. மீண்டும் எழுந்த விவாகரத்து சர்ச்சை
சமையல் துறையில் மிகவும் பிரபலமானவர்களின் ஒருவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் மெகந்தி சர்க்கஸ் எனும் திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் வீடு விசேஷங்களுக்கு இவர் தான் கேட்டரிங் செய்து வருகிறார்.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ், நடிகர் விஜய்க்கு பிடித்த அசைவ உணவை குறித்தும், அதை அவருக்கு செய்து கொடுத்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இதில் ' விஜய் சாருக்கு சிக்கன் பிரியாணி மிகவும் பிடிக்கும். பிச்சிப்போட்ட சிக்கன், பெரி பெரி சிக்கன் போன்ற அசைவ உணவுகளை விரும்பி உண்பார். அதை நாம் அவருக்கு செய்து கொடுத்திருக்கிறேன். அவர் என்னை பாராட்டியுள்ளார்' என கூறியுள்ளார்.
இதை தவிர்த்து நடிகர் விஜய்க்கு அசைவத்தில் மட்டனும் விரும்பி சாப்பிடும் உணவு என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
