விஜய் நடிப்பில் வெளிவந்த முதன் முதலில் ரூ. 50 கோடி வசூல் செய்த படம் எது தெரியுமா.. இதோ
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார்.

ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பூ என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். வாரிசு படத்தை முடித்த கையோடு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
முதல் ரூ. 50 கோடி வசூல் செய்த திரைப்படம்
விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று கில்லி. தரணி இயக்கிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இந்நிலையில், இப்படம் பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ. 54 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவே நடிகர் விஜயின் முதல் ரூ. 50 கோடி வசூல் செய்த திரைப்படம் ஆகும்.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu