இரண்டாவது முறையாக விஜய்க்கு வில்லனாகும் மிரட்டலான நடிகர்.. எகிறும் எதிர்பார்ப்பு
தளபதி 67
நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் 6 வில்லன்கள் என தகவல் வெளியானது. இதில் சஞ்சய் தத் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் முதல் இரண்டு வில்லங்களாக தேர்வாகியுள்ளார்களாம்.
அதே போல் மூன்றாவது வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
நான்காவது வில்லன்
இந்நிலையில், தற்போது நான்காவது வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கமிட்டாகியுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து ஏற்கனவே வெளிவந்த மாஸ்டர் படத்திலும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
அதுமட்டுன்றி அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்திலும் வில்லனாக மிரட்டலான நடிப்பை விஜய் சேதுபதி வெளியிப்படுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
