நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டின் மதிப்பு இவ்வளவு கோடியா.. முழு விவரம் இதோ
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்த நேரத்தில் சினிமாவிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார்.
வருகிற 2026 தேர்தலை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் விஜய், கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் 41 பேர் உயிரிழந்தனர். இது மிகப்பெரிய அதிர்வலையை இந்திய அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.
விஜய்யின் வீடு
நீலாங்கரையில் விஜய்க்கு சொந்தமாக பிரம்மாண்ட வீடு இருப்பதை நாம் அறிவோம். ஆனால், அந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு, அந்த வீட்டிற்குள் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பது பலருக்கும் தெரியாது.
வீட்டின் மதிப்பு
இந்நிலையில், விஜய்யின் நீலாங்கரை வீட்டின் மதிப்பு? வீட்டிற்குள் உள்ள வசதிகள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜய் வீடு வாசலில் துவங்கி விளக்கு என அனைத்துமே ஆட்டோமேட்டிக் சிஸ்டம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
இவருடைய வீட்டின் ஹைலைட்டான விஷயங்கள் என்று பார்த்தால், மிகப்பெரிய லிவ்விங் ரூம், வீட்டிற்குள்ளேயே ஜிம், மிகப்பெரிய நீச்சல் குளம் ஆகும்.
மேலும் நீலாங்கரையில் அமைத்திருக்கும் விஜய்யின் இந்த பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு ரூ. 70 கோடி முதல் ரூ. 80 கோடி ஆகும்.