33 Years Of Vijayism: அதிக வசூல் செய்த தளபதி விஜய்யின் டாப் 10 திரைப்படங்கள்
விஜய்
தமிழக மக்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது.

அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் இதுவே தனது கடைசி படம் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என அறிவித்துள்ளார். பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜனநாயகன் வருகிற 2026 ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது.
33 Years Of Vijayism
நடிகர் விஜய் திரையுலகில் கால்பதித்து இன்றுடன் 33 வருடங்கள் ஆகிவிட்டன. ஆம், இன்றுதான் விஜய் நடித்த நாளைய தீர்ப்பு படம் வெளியானது. விஜய் திரையுலகில் கால்பதித்து 33 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

டாப் 10 படங்கள்
இந்த நிலையில், விஜய்யின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
இதோ அந்த லிஸ்ட்:
- லியோ - ரூ. 595 - 600 கோடி
- கோட் - ரூ. 450 கோடி
- பிகில் - ரூ. 295 கோடி
- வாரிசு - ரூ. 290 கோடி
- மெர்சல் - ரூ. 250 கோடி
- சர்கார் - ரூ. 250 கோடி
- மாஸ்டர் - ரூ. 220 கோடி
- பீஸ்ட் - ரூ. 210 கோடி
- தெறி - ரூ. 150 கோடி
- கத்தி - ரூ. 130 கோடி