கடைசியாக நடிகர் விஜயகாந்த் நடித்த திரைப்படம், வீடியோவுடன் இதோ- ஆனால்?
நடிகரின் படம்
கேப்டன் மீண்டும் திரும்பி வாருங்கள் கேப்டன், அந்த கம்பீர குரலை இனி எப்போது நாங்கள் கேட்போம் என நடிகர் விஜயகாந்தின் ரசிகர்கள், தொண்டர்கள் கண்ணீரில் உள்ளனர்.
சாலிகிராமத்தில் அவரது வீட்டில் இருந்து விஜயகாந்த் உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் அவர்களின் உடல் நாளை மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை வந்துகொண்டிருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின், கவுண்டமணி, தியாகு போன்ற பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுள்ளனர்.
கடைசி படம்
பல ஹிட் படங்களை கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வந்த விஜயகாந்த் அவர்கள் கடைசியாக ஒரு படம் நடித்தார், ஆனால் அப்படம் பாதியிலேயே டிராப் ஆனது. அந்த படத்தின் பெயர் தமிழன் என்று சொல் என்பது தான்.
டிராப் ஆன அந்த படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்,
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடைசியாக நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட தமிழன் என்று சொல் படப்பிடிப்பு தளம் pic.twitter.com/G5KkXHkZSS
— Rajini (@rajini198080) December 28, 2023