மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்
கேப்டன்
தமிழ் சினிமாவில் 1979ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான இனிக்கும் இளமை படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கினார் விஜயகாந்த்.
பின் அவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது சட்டம் ஒரு இருட்டறை படம் தான், இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
புலன் விசாரணை, சேதுபதி ஐபிஎஸ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், வானத்தைப் போல, தவசி, ரமணா என இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
54 புதிய இயக்குனர்களை தனது சினிமா பயணத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு எத்தனையோ பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளார். பலரை வாழ வைத்த விஜயகாந்த் அவர்கள் இன்று நம்மோடு இல்லை.
சரி விஜயகாந்த் அவர்கள் எடுத்த இதுவரை நாம் பார்த்திராத சில புகைப்படங்களை காண்போம்.