விக்ரம் 2 வில் இணைகிறாரா முக்கிய பிரபலம்? மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதில் பஹத் பாசில், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் ரோலில் நடித்திருந்தார்.
சூர்யா நடித்திருந்தா ரோலக்ஸ் கதாபாத்திரம் மிக பிரபலமானது. இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் விக்ரம் தானாம். ஆனால் சில காரணங்களால் அவர் இதை மறுத்துவிட்டாராம்.
இதையடுத்து தளபதி விஜய்யின் 67 படத்திலும் விக்ரமை வில்லனாக நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் அதையும் அவர் மறுத்துவிட்டார் என்று இணையத்தில் தகவல் ஒன்று வெளியானது.
விக்ரம் 2
இந்நிலையில் விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து நடிகர் விக்ரமும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை. இருப்பினும் இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் எல்லாம் பொய்..உண்மையை போட்டு உடைத்த ஹெச் வினோத்

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
