காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள்.. விக்ரம் சொன்ன அந்த விஷயம்
விக்ரம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். சாமி, தூள், ஐ, பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த இவர் நடிப்பில் கடைசியாக தங்கலான் படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு பின் விக்ரம் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். சியான் விக்ரம் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை திரையில் காண ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். நாளை உலகளவில் பிரம்மாண்டமாக இப்படம் வெளிவரவுள்ளது.
அந்த விஷயம்
இந்நிலையில், இப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் விக்ரம் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "முன்பெல்லாம் காதல் தோல்வி என்றால் தான் தாடி வளர்ப்பார்கள், தற்போது காதலிப்பதற்காகவே தாடி வளர்க்கிறார்கள். தொடர்ச்சியாக நான் நடிக்கும் அனைத்து படத்திலும் தற்போது தாடி வளர்த்து வருகிறேன்" என்று கூறியுள்ளார்.

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
