சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை.. தனது மனைவி குறித்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்த நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். பல கேலி கிண்டலுக்கு உள்ளன இவர் நடிப்பின் மீது உள்ள அன்பாலும், கடின உழைப்பாலும் பல தடைகளை தாண்டி தற்போது சினிமாவில் அவருக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சாமி, தூள், ஐ, பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி பெற்ற படங்களை கொடுத்த இவர் நடிப்பில் கடைசியாக தங்கலான் படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் ஷைலஜா என்பவரை காதலித்து 1992 - ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு துருவ் என்ற மகனும், அக்சிதா என்ற ஒரு மகளும் உள்ளார்.
அதிர்ச்சி தகவல்
இந்நிலையில், விக்ரம் அவரது மனைவி குறித்து சில அதிரடி தகவலை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், "பாடலாசிரியர் மற்றும் கல்வியாளர்கள் இருக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஷைலஜா.
அதனால் அவர் நான் சினிமாவில் நடிப்பதை ஆரம்ப காலகட்டத்தில் விரும்பவில்லை. ஆனால், நான் சினிமா தான் என் முதல் காதல் அதை என்னால் எந்த காரணத்திற்காகவும் விட முடியாது என்ற கருத்தில் மிகவும் பிடிவாதமாக இருந்தேன்.
இதை என் மனைவி காலப்போக்கில் புரிந்து கொண்டு எனக்கு உறுதுணையாக இருக்கிறார். இன்று நான் இந்த இடத்தில் இருக்க என் மனைவிக்கு பெரும் பங்கு உள்ளது" என்று கூறியுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
