சக பயணியிடம் அத்துமீறிய நடிகர் விநாயகன்! - நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு
விநாயகன்
மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிலம்பாட்டம், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தற்போது ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இவர், அண்மையில் தனது மனைவி பபிதாவைப் பிரிந்துவிட்டதாக, தனது சமூக வலைத்தளப்பக்கத்தின் நேரலையில் தோன்றி தெரிவித்திருந்தார்.

விநாயகன் பல ஆண்டுகளாக பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார். மேலும் அவரது பேச்சுக்கள் அவரை சிக்கலில் ஆழ்த்திவிடுகிறது.
அத்துமீறிய விநாயகன்
இந்நிலையில் கோவா விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் ஏற காத்திருந்தபோது இவர் அத்துமீறி நடந்ததாக சகபயணி கூறியுள்ளார். விமானத்தில் ஏற காத்திருந்த சக பயணியை வீடியோ எடுத்ததாகவும் மேலும் துஷ்பிரயோகம் செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்த விநாயகன் தான் எந்த வீடியோவும் எடுக்கவில்லை என்றும் விருப்பப்பட்டால் செல்போனை சோதனை செய்யுமாறு கூறியுள்ளார். இதை முற்றிலும் ஏற்க மறுத்த பயணி விமான நிலையத்தை அணுகினார்.

ஆனால் அவர்களிடமிருந்து சரியான பதில் கிடைக்காததால் ஏர்சேவா போர்ட்டல் மூலம் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் துணைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் மனுவில் விநாயகனை எதிர்மறை மனுதாரராக சேர்க்க மனுதார வழக்கறிஞர்க்கு உத்தரவிட்டது.
புடவை கட்ட சொல்லி அட்வைஸ் கொடுத்த நெட்டிசன்- செம பதிலடி கொடுத்த தொகுப்பாளினி அர்ச்சனா