பிக்பாஸ் ஆயிஷாவுக்கு 2 திருமணம் நடந்ததாக சர்ச்சை.. நடிகர் விஷ்ணு விளக்கம்
பிக் பாஸ் வீட்டில் தற்போது முக்கிய போட்டியாளராக இருக்கிறார் சீரியல் நடிகை ஆயிஷா. ஜீ தமிழில் சத்யா சீரியலில் நடித்து வந்த அவர் தற்போது விஜய் டிவியின் பிக் பாஸுக்கு சென்றிருக்கிறார்.
ஆயிஷா
பிக் பாஸில் மற்ற போட்டியாளர்கள் தங்கள் கடந்த வந்த பாதை கதையை சொன்ன நிலையில் ஆயிஷா மட்டும் அதை பற்றி வாய் திறக்கவே இல்லை. அவரது கடந்தகாலம் பற்றி பேசவே முடியாத அளவுக்கு அப்படி என்ன நடந்தது என பிக் பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் தற்போது ஆயிஷாவின் முன்னாள் காதலர் ஒருவர் அளித்த பேட்டியில் ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடந்து விவாகரத்து ஆகிவிட்டது என கூறி இருந்தார். மேலும் ஆயிஷாவின் காதல் முறிவுக்கு சீரியல் நடிகர் விஷ்ணு தான் காரணம் எனவும் அவர் கூறி இருந்தார்.
நடிகர் விஷ்ணு விளக்கம்
இந்நிலையில் சீரியல் நடிகர் விஷ்ணு இந்த விவகாரம் பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார். 'நான் ஆயிஷாவை காதலித்தால் அதை வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு தைரியம் இருக்கிறது' என கூறி இருக்கிறார்.
மேலும் ஆயிஷா பிக் பாஸ் செல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கும் நிலையில் அவரே அசிங்கப்படுத்த வேண்டும் என்றே இப்படி செய்கிறார்கள் எனவும் கூறி இருக்கிறார்.
100 நாள் கழித்து ஆயிஷா பிக் பாசில் இருந்து வெளியில் வரும்போது இது பற்றி அவரே விளக்கம் அளிப்பார் என்று விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நடிகர் கஞ்சா கருப்புக்கு இப்படியொரு நிலைமையா?- சொந்த வீடு போனதா?