இந்த புகைப்படத்தில் தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரம் ஒருவர் இருக்கிறார்.. யார் என தெரிகிறதா
வைரல் போட்டோ
சினிமாவில் உள்ள நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம்தான். அந்த வகையில் தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரம் ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

விவேக்
அவர் வேறு யாருமில்லை மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் தான். ஆம், நடிகர் விவேக் தனது சக நகைச்சுவை கலைஞர்களுடன் தனது இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விவேக் பாலசந்தர் இயக்கியத்தில் வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் எனும் படத்தின் மூலம் நடிகையாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இதன்பின் தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து முன்னணி நட்சத்திரமாகவும் உயர்ந்தார். மக்களை சிரிக்க வைக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கும் வகையில் இருந்தது இவருடைய வசனங்கள்.
ரசிகர்களின் மனதை வென்ற விவேக் கடந்த 2021ம் ஆண்டு காலமானார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை தந்தது. தமிழ் திரையுலகம் மாபெரும் கலைஞனை இழந்தது. நடிகர் விவேக் தனது வாழ்நாளில் 33.23 லட்சம் மரக்கன்றுகளை நட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    