ஹாலிவுட் படங்களில் ராஷி கன்னா? ரகசியத்தை உடைத்த நடிகை
ராஷி கன்னா
தமிழ், தெலுங்கு, இந்தி என கடந்த சில ஆண்டுகளாக இந்தியளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார் ராஷி கன்னா.
இவர் சமீபத்தில் வெளிவந்த ஃபார்சி வெப் சீரிஸில் கூட முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். தற்போது, இவர் நடிப்பில் வரும் 28 - ம் தேதி பான் இந்திய அளவில் வெளிவர உள்ள திரைப்படம் அகத்தியா.
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் ராஷி கன்னா பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹாலிவுட் படங்கள்
அதில், " நான் தமிழில் அரண்மனை 3 மற்றும் 4 ஆகிய படங்களில் நடித்துள்ளேன். ஹாரர் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் இந்த படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது.
அதனால், அனைவரும் இப்படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும், ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் கண்டிப்பாக நான் அதை ஏற்று நடிப்பேன். அந்த வாய்ப்புக்காக தான் நான் காத்துக்கொண்டிருந்தேன்" என்று கூறியுள்ளார்.