பக்கத்தில் இருந்து கொண்டு, ஆத்திரமாக உள்ளது.. நடிகை வாணி போஜன் அதிரடி
வாணி போஜன்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமான இவர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான "ஓ மை கடவுளே" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பின், படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சிறந்த நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து அதிக ரசிகர்களையும் சம்பாதித்து உள்ளார்.
வாணி போஜன் அதிரடி
இந்நிலையில், பேட்டி ஒன்றில் அவரை குறித்து வரும் மோசமான செய்திகள் கமெண்ட்டுகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
அதில், " சில நேரம் என்னை குறித்து வரும் தவறான செய்திகளை பார்க்கும்போது ஆத்திரமாக தான் இருக்கும். நடந்தவற்றை நம்முடன் இருந்து பார்த்தது போன்று எழுதுவார்கள்.
அதை பார்க்கும்போது சற்று கடினமாக இருக்கும். ஆனால், தற்போது அவை அனைத்தையும் கடந்து வந்து விட்டேன். எழுதுவதை உன் இஷ்டம் போன்று எழுது நான் மகிழ்ச்சியாக உள்ளேன்" என்று கூறியுள்ளார்.

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
