அப்போது ஆச்சரியப்பட்டார்கள், ரஜினிக்கு மகளாக நடித்த நடிகை ஓபன் டாக்
அண்ணாமலை
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 1992ம் ஆண்டு வெளிவந்த படம் அண்ணாமலை. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூ நடிக்க தேவா இசையமைத்திருந்தார்.
‘அண்ணாமலை' படத்தில் ரஜினிகாந்த்தின் மகளாக நடித்த சிறுமி தக்ஷாயினி உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆம், தற்போது இரண்டு குழந்தைகளின் தாயாக இருக்கும் இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
ஓபன் டாக்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் ரஜினி குறித்து இவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " நான் இப்பவும் ரஜினி சார் ரசிகைதான். எங்கள் குடும்பத்தில் அனைவரும் ரஜினி சார் ரசிகர்கள் தான். அவர் ஒரு சிறந்த நடிகர் என்று பலருக்கு தெரியுமா என்று தெரியவில்லை.
சமீபத்தில் என் குழந்தைகளுடன் சேர்ந்து 'பைரவி' படத்தை பார்த்தோம். அப்போது ரஜினி சார் நடிப்பை கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
அவருடைய நடிப்பு ரொம்ப யதார்த்தமாக இருந்தது. அவர் ஸ்டைலாக நடிக்கிறார்னு பலரும் கூறுவர். ஆனால் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது பலருக்கு தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.