நடிகை அதிதி ராவின் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா?- கோலாகலமாக நடந்த அவரது இரண்டாவது திருமணம்
நடிகை அதிதி ராவ்
நடிகை அதிதி ராவ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் நடித்து வருபவர் அதிதி ராவ். 2006ம் ஆண்டு மலையாளத்தில் சாவித்திரி படம் மூலம் நடிக்க தொடங்கி ஹிந்தி படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார்.
எல்லா மொழி படங்களையும் சேர்த்து 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைகோ, ஹே சினாமிகா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
குடும்பம்
அதிதி 2009ம் ஆண்டு சத்யதீப் மிஷ்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார், ஆனால் சில காரணங்களால் இவர்களது திருமண வாழ்க்கை 2013ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
தற்போது அதிதி ராவ், நடிகர் சித்தார்த்துடன் காதலில் இருப்பதாக செய்திகள் உலா வரும் நிலையில் நடிகையின் முதல் கணவருக்கு மறுமணம் நடந்துள்ளது. சத்யதீப் மிஷ்ரா என்பவருக்கு மசாபா குப்தா என்பவருடன் கோலாகலமாக மறுமணம் முடிந்துள்ளது.
அந்த புகைப்படங்கள் வெளியாக மக்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
விஜய்யின் 67வது படத்தின் டைட்டில் இதுவா?- வைரலாகும் செம பெயர்