நடிகை அதிதி ராவ் ஹைதரி பிறந்தநாள்: இவருடைய மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
அதிதி ராவ் ஹைதரி
2006ல் வெளிவந்த பிரஜாபதி என்கிற மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைதரி. தமிழில் சிருங்காரம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதன்பின் பாலிவுட் பக்கம் தனது கவனத்தை செலுத்திய அதிதி ராவ், 2017ஆம் ஆண்டு மீண்டும் தமிழில் நடிக்க தொடங்கினார். மணி ரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்தார்.

இதை தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்து வந்தார். சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
சொத்து மதிப்பு
இன்று நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கு பிறந்தநாள். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வரும் நிலையில், அதிதியின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. இவருடைய சொத்து மதிப்பு ரூ. 60 கோடி என கூறப்படுகிறது. இவர் ரூ. 1 கோடி முதல் ரூ. 1.5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

அதிதியின் கணவரும் பிரபல நடிகருமான சித்தார்த்தின் சொத்து மதிப்பு ரூ. 70 கோடி இருக்கும் என்கின்றனர். இவை இரண்டையும் சேர்த்தால் இவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 130 கோடி ஆகும்.