ரோஜா திரைப்படம் பார்த்துவிட்டு தன்னை செருப்பால் அடித்துக்கொண்ட பிரபல நடிகை- ஏன் தெரியுமா?
தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரோஜா.
அரவிந்த் சாமி, மதுபாலா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இப்படம் காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும்.
இப்போதும் இந்த படத்திற்கு தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது, அதிலும் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் வெளிவந்த இப்பட பாடல்களுக்கு இன்றும் பலரும் அடிமை.
படம் குறித்த தகவல்
இப்பட கதை எழுதியதும் நாயகியாக நடிக்க வைக்க முதலில் லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவை தான் மணிரத்னம் கேட்டாராம்.
ஆனால் அப்போது தெலுங்கு படத்திற்காக முன்பணம் வாங்கி விட்டதால் மணிரத்னம் படத்தில் நடிக்க முடியாது என ஐஸ்வர்யாவின் பாட்டி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஐஸ்வர்யா ஒரு பேட்டியில், ரோஜாவில் நடிக்க தேதி இல்லை என தெலுங்கு படத்தில் நடித்தேன், ஆனால் அந்த படமும் டிராப் ஆனது. திரையில் ரோஜா படத்தை பார்த்த போது தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டதாக பேட்டி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா கூறியுள்ளார்.
இதுவரை திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்?- முதன்முறையாக நடிகை பிரியா பவானி ஷங்கர் சொன்ன விஷயம்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
