33வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சொத்து மதிப்பு, சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஐஸ்வர்யா ராஜேஷ்
மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
நீதானா அவன் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பின் காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ், வட சென்னை என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார்.
சொத்து மதிப்பு
இன்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனால் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அவரின் சொத்து மதிப்பு ரூ. 11 கோடி என்றும் ஒரு படத்திற்கு அவர் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
மேலும், விளம்பரம் மற்றும் இதர வருமானமாக அவருக்கு மாதத்திற்கு ரூ 2 லட்சம் வருவதாக கூறப்படுகிறது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
