பட வாய்ப்பு கேட்டு போன இடத்தில் நடந்த மோசமான அனுபவம்!! ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்..
ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முக்கியமாக ஹீரோயின்களை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
ஓபன் டாக்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.அதில் அவர், சினிமாவில் எனக்கு வேதனையான அனுபவங்கள் நிறைய உள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு ஒரு இயக்குனர் அழைத்து இருந்தார்.
நானும் சென்று இருந்தேன், என்னை பார்த்துவுடன், இந்தப் பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகக்கூட இருக்க முடியாது திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று அந்த இயக்குனர் பேசினார். ஆனால் நான் அவர் சொன்னதை ஊக்கமாக எடுத்துக்கொண்டேன்.
அதே போல இயக்குனர் ஒருவரை பார்ட்டியில் சந்தித்தேன், அவரிடம் எதாவது ரோல் கேட்டேன் ஆனால் அவரோ எனக்கு ரொம்பவே மோசமான கதாபாத்திரத்தை கொடுத்தார். அவர்களது எண்ணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
