பிறந்தநாளில் புதிய சீரியல் அறிவிப்பை வெளியிட்ட நடிகை ஆல்யா மானசா... எந்த டிவி தொடர்?
ஆல்யா மானசா
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் செம்பாவாக, ராஜா ராணி 2 மூலம் சந்தியாவாக, சன் டிவியில் ஒளிபரப்பான இனியா தொடர் மூலம் இனியாவாக மக்களை கவர்ந்து வந்தவர் ஆல்யா மானசா.
சன் டிவியின் இனியா தொடர் முடிந்ததில் இருந்து அவர் எந்த தொலைக்காட்சி சீரியலில் கமிட்டாவார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
சர்ப்ரைஸ்
இன்று சீரியல் நடிகை ஆல்யா மானசா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
துபாயில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியவர் இன்றைய தினத்தில் தனது கணவருடன் நடித்த Cleopatra ஆல்பம் பாடலையும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஆல்யா மானசா தனது புதிய தொடரின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சன் மற்றும் விஜய் டிவியில் சீரியல்கள் நடித்தவர் இப்போது ஜீ தமிழ் பக்கம் வந்துள்ளார்.
ஆனால் என்ன தொடர் போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
