நடிகை எமி ஜாக்சனா இது.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
எமி ஜாக்சன்
ஆர்யா நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.
இதனை அடுத்து தாண்டவம், கெத்து, தெறி, 2.0, தங்கமகன், ஐ போன்ற படங்களில் நடித்துள்ளார். எமி ஜாக்சன் லண்டனை சேர்ந்த ஜார்ஜ் என்கிற தொழிலதிபரை காதலித்து வந்தார்.
இந்த காதல் ஜோடிக்கு 2019 -ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அவரது மகனுக்கு Andreas Jax Panayiotou என்று பெயர் சூட்டினார்கள்.
திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜ் - எமி ஜாக்சன் ஜோடி, திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்து கொண்டனர்.
அதன் பின், நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து எமி ஜாக்சன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே ஆண் குழந்தை இருக்கும் நிலையில், மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.
வைரலாகும் வீடியோ
அதன் புகைப்படங்களை கூட சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், விருது நிகழ்ச்சி ஒன்றில் எமி புதிய ஹேர் ஸ்டைலுடன் கலந்து கொண்ட வீடியோவை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.