தொழிலதிபருடன் ரகசிய திருமணம் செய்துகொண்டாரா நடிகை அஞ்சலி?- அவரே கொடுத்த பேட்டி
நடிகை அஞ்சலி
ராம் இயக்கிய கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
இப்படம் அவருக்கு நல்ல பெயர் கொடுக்க அடுத்து வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு திரைப்படத்தில் நடிக்க அஞ்சலிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி புகழ் அர்ச்சனாவின் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் என்ன தெரியுமா?- செம படிப்ஸ் தான்
அதன்பிறகு எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, இறைவி என தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
இப்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நாயகனாக நடிக்கும் கேம்சேஞ்சர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இடையில் பிரபல நடிகருடன் காதலில் இருந்தவர் இப்போது அந்த உறவில் இருந்து வெளியே வந்துவிட்டார். உடல் எடையை குறைத்து இப்போது ஆளே மாறிவிட்டார்.
நடிகையின் திருமணம்
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை அஞ்சலி தனது திருமண வதந்திகள் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், நான் முதலில் ஜெய்யை காதலித்ததாக செய்தி வந்தது, பின்னர் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனதாக சொல்லப்பட்டது. எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் ஆனதை நினைத்து நான் சிரித்தேன்.
நடிகை என்பதால் அவர்களை பற்றி வாய்க்கு வந்தபடி எழுதுகிறார்கள் என அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.