முன்னணி நடிகையான அஞ்சலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை அஞ்சலி
நாயகியாக ஆவதற்கு முன் நிறைய விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அஞ்சலி. 2007ம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கற்றது தமிழ என்ற படம் மூலம் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே பெரிய ரீச் பெற்ற அஞ்சலி 2010ம் ஆண்டு அங்காடி தெரு படத்தில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தார். அதன்பிறகு எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா, ரெட்டை சுழி, சேட்டை, வத்திக்குச்சி, இறைவி, மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.
தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இதனிடையில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்த இவர் இப்போது பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
சொத்து மதிப்பு
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் வலம் வரும் நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு ரூ. 10 கோடி என்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஜீவாவின் நிஜ மகளா இவர்- நன்றாக வளர்ந்துவிட்டாரே, கியூட் க்ளிக்