திருமணம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அஞ்சலி
தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் வெற்றி படங்களை தந்த அஞ்சலி தற்போது தனது திருமணத்தை பற்றி பதில் அளித்துள்ளார்.
ராம் இயக்கத்தில் வெளிவந்த "கற்றது தமிழ்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அஞ்சலி.
சினிமா வாழ்கை
"நான் இயக்குனர் ராம் சாரின் மாணவி என்று நான் பெருமையாக சொல்வேன்.அவருடன் ஒவ்வொரு படம் பண்ணும் போது அவரிடம் இருந்து நிறைய விஷயம் கற்று கொள்கிறேன்.
புதிதாக சினிமாவுக்கு வருபவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் கொஞ்சம் வீக்காக இருந்தால் கூட சினிமாவில் தாக்கு புடிக்க முடியாது" என்று கூறினார் அஞ்சலி.
திருமணம்
"காதல் என்பது ஒரு அழகான உணர்வு அதை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். என்னது திருமணத்தை பற்றி வீட்டில் கேட்பாங்க, ஆனால் என் திரைத்துறை வாழக்கையை புரிந்து கொண்டு எனக்கு அழுத்தம் தரமாட்டார்கள்.
முன்பெல்லாம் திருமணம் முடிந்தால் நடிகைகள் நடிக்க வரமாட்டார்கள், தற்போது அந்த நிலை மாறிவிட்டது.
இப்போதைக்கு என் திருமணத்தை பற்றி நான் யோசிக்கவில்லை, ஆனால் நிச்சியம் பண்ணுவேன், திருமணத்தை ரகசியமா வைக்க மாட்டேன் எல்லோருக்கும் சொல்வேன்" என்று பேட்டியில் அஞ்சலி தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்துவின் எமோஷ்னல் பதிவு- அந்த மனசு இருக்கே, என்ன செய்தார் பாருங்க