புதிய விஷயத்தை தொடங்கப்போகும் நடிகை அனுஷ்கா ஷெட்டி- ஜெயிப்பாரா?
அனுஷ்கா ஷெட்டி
தெலுங்கில் 2005ம் ஆண்டு சூப்பர் படத்தில் அறிமுகமாகி பின் அருந்ததி என்ற படத்தின் மூலம் பெரிய ரீச் பெற்றவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.
பேய் படமான அருந்ததி அனுஷ்கா சினிமா பயணத்திற்கு ஒரு பாதையாக அமைந்தது. இதையடுத்து தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக மேனேஜர் வைக்கும் அளவிற்கு வளர்ந்தார்.
பாகுபலி, பாகுபலி 2 படம் அவரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஈர்க்க வைத்தது. பின் ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை ஏற்றி நடிக்க அப்படமே அவருக்கு பிரச்சனையாக அமைந்தது, இப்படத்திற்காக ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமல் திணறினார்.
புதிய படம்
தமிழ், தெலுங்கு என கொடிகட்டி பறந்த நடிகை அனுஷ்கா ஷெட்டி இப்போது மலையாள சினிமாவில் அறிமுகமாக இருக்கிறாராம்.
அந்தப் படத்தை ஹோம் படத்தின் இயக்குநர் ரோஜின் தாமஸ் இயக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முதன்முறையாக அனுஷ்கா மலையாளத்தில் நடிக்க இருப்பதால் அம்மொழியில் ஜெயிப்பாரா பார்க்கலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
