நடிகை அனுஷ்காவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
நடிகை அனுஷ்கா ஷெட்டி
தென்னிந்திய திரையுலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் அருந்ததி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் சென்சேஷன் நடிகையாக வலம் வந்தார்.
இப்படத்திற்கு முன் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், அருந்ததி தான் நல்ல அடையாளத்தை இவருக்கு உருவாக்கியது.
இதன்பின் தமிழில் என்ட்ரி கொடுத்த அனுஷ்காவிற்கு சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தது. இதை தொடர்ந்து சிங்கம் 2, வேட்டைக்காரன், தெய்வத்திருமகள், வானம், லிங்கா, என்னை அறிந்தால் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் உடல் எடை கூடியதன் காரணமாக சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. இதன்பின் ஓரிரு திரைப்படங்கள் மட்டுமே நடித்து வந்த அனுஷ்கா மீண்டும் Miss Shetty Mr Polishetty படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
அம்மாவுடன் அனுஷ்கா
இந்நிலையில், நடிகை அனுஷ்கா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அனுஷ்கா பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
happu birthday maaa???? pic.twitter.com/r0SjnwNfCt
— Anushka Shetty (@MsAnushkaShetty) July 31, 2023
இதுவரை இல்லாத உச்ச கட்ட கிளாமரில் சூப்பர் சிங்கர் பிரகதி.. வாய்பிளக்கும் ரசிகர்கள்