உச்சத்தில் இருந்த போதே சினிமாவில் இருந்து ஒதுங்கிய நடிகை அசின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தெலுங்கு சினிமாவில் தனது சினிமா பயணத்தை தொடங்கி தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் கொடிகட்டி பறந்தவர் நடிகை அசின்.
All Is Well தான் அவரது கடைசிப் படம், அதுவும் ஹிந்தியில் தான், ஆனால் அதன்பிறகு அவர் படங்கள் நடிப்பது இல்லை.
தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி, பிரஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ் என பல மொழிகளை அசின் கற்றுக் கொண்டுள்ளார்.
பின் 2016ம் ஆண்டு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். அசினுக்கு ஆரி என்ற பெண் குழந்தை 2017ம் ஆண்டு பிறந்தது.

சொத்து மதிப்பு
ஒரு காலத்தில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருந்த அசின் வாங்கிய சம்பளம் அதிகம். தற்போது சமூக வலைதளங்களில் அசினின் சொத்து மதிப்பு குறித்து ஒரு குறிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த வருட கணக்குப்படி அவரின் சொத்து மதிப்பு ரூ. 27 கோடி வரை உள்ளது என்கின்றனர்.
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu