பில்லா படத்தில் நயன்தாராவிற்கு பதில் அசின் தான் முதலில் நடிக்க இருந்தாரா?- அவர் எடுத்த போட்டோ ஷுட்
நடிகை அசின்
தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போதும் இவர் நடிக்க வரலாமே என ஆசைப்படும் நாயகி என்றால் அது அசின் தான்.
தனது 15 வயதில் மலையாள படத்தில் முதன்முதலில் நடிக்க ஆரம்பித்த அசின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து வந்தார்.
மொத்தமாக 25 படங்கள் வரை தான் நடித்துள்ளார், தமிழில் அவர் நடித்த ஹிட் படங்கள் என்றால் N குமரன் S/o மகாலட்சுமி, உள்ளம் கேட்குமே, கஜினி. வரலாறு, போக்கிரி, தசாவதாரம் போன்ற படங்களை கூறலாம்.
கடைசியாக ஹிந்தியில் தான் நடித்தார். அதன்பிறகு தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். அவ்வப்போது தனது மகளின் பிறந்தநாளின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மட்டுமே பதிவு செய்வார்.
பில்லா பட போட்டோ ஷுட்
தற்போது நடிகை அசினின் நாம் இதுவரை பார்த்திராத போட்டோ ஷுட் வெளியாகியுள்ளது. அவர் அஜித்துடன் பில்லா படத்தில் முதலில் கமிட்டாகி போட்டோ ஷுட் எல்லாம் நடத்தியுள்ளார்.
ஆனால் சில தேதி பிரச்சனைகளால் அவர் வெளியேற அதன்பிறகே நயன்தாரா நடித்துள்ளார்.
இதோ அசின் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்,
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியது ஏன்?- சாய் காயத்ரியின் பதில்

நான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது.. உதயநிதி காய்ச்சலே வந்து படுத்துக்கொண்டார் - இபிஎஸ் IBC Tamilnadu
