உடலை பிட்டாக வைத்துக் கொள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி செய்யும் விஷயம்- பிட்னஸ் டிப்ஸ்
சைத்ரா ரெட்டி
சினிமாவில் நுழையும் போது பலருமே நாயகனாகவோ, நாயகியாகவோ நுழைய வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் சின்னத்திரையில் நுழைந்த ஒரு நாயகி முதலில் வில்லியாக கலக்கிவிட்டு இப்போது நாயகியாக வலம் வருகிறார்.
ஜவான் படம் பார்க்க வந்த இடத்தில் லியோ படம் பற்றி பேசிய இசையமைப்பாளர் அனிருத்- அடுத்த அப்டேட் எப்போது?
அவர் வேறுயாரும் இல்லை நடிகை சைத்ரா ரெட்டி தான், இவர் தமிழில் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்து மக்களை கவர்ந்தார்.
இப்போது சன் தொலைக்காட்சியில் தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் TRPயில் டாப்பில் இருக்கும் கயல் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
பிட்னஸ் சீக்ரெட்
உணவு விஷயத்தில் மிக மிக கவனமாக இருப்பாராம், ஆரம்பத்தில் படப்பிடிப்பில் தரும் உணவுகளை சாப்பிட்டு வந்த சைத்ரா கொரோனாவிற்கு பின் வீட்டு சாப்பாடு தானாம்.
உடலை பிட்டாக வைத்துக்கொள்ள எப்போதும் வெந்நீரை தான் குடிப்பாராம், வாரம் ஒருமுறை டீடாக்ஸ் பானங்களை குடிப்பாராம். வாக்கிங் தினமும் செல்வாராம், குறைந்தது 1 கிலோ மீட்டர் வரை கூட வாக்கிங் செல்வாராம்.