ஜவான் படம் பார்க்க வந்த இடத்தில் லியோ படம் பற்றி பேசிய இசையமைப்பாளர் அனிருத்- அடுத்த அப்டேட் எப்போது?
ஜவான் படம்
பாலிவுட்டையே ராஜ்ஜியம் செய்யும் நடிகர் ஷாருக்கான் பல வருடங்களுக்கு பிறகு தமிழ் பட இயக்குனருடன் கைகோர்த்து தமிழில் படம் நடித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று படு மாஸாக உலகம் முழுவதும் வெளியாகிவிட்டது,
முதல் ஷோ முடிந்ததும் நல்ல விமர்சனங்கள் வந்தன, அடுத்தடுத்த ஷோ முடிவில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் படம் எப்படியும் இறுதியில் நல்ல வசூல் வேட்டை நடத்திவிடும் என்கின்றனர்.

லியோ அப்டேட்
ஜவான் படத்தில் இசையமைத்துள்ள அனிருத் முதல் நாள் முதல் காட்சி இயக்குனர் அட்லீயுடன் இணைந்து பார்த்துள்ளார். அப்போது அனிருத்திடம் விஜய்யின் லியோ படம் குறித்து அப்டேட் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த வாரம் ’லியோ’ படத்தின் ஆச்சரியமான அப்டேட்டுகள் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri