சிறு வயதில் இவ்வளவு அழகாக உள்ளாரே .. இந்த பாப்புலர் நடிகை யார் தெரிகிறதா?
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக ராஜ்ஜியம் செய்து வருபவர் அவரது தற்போதைய போட்டோ மற்றும் சிறு வயதில் எடுத்த போட்டோவை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அட இவரா
அது வேறு யாருமில்லை நடிகர் சக்தி கபூர் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவுட் சினிமாவில் 2010ம் ஆண்டு, டீன் பட்டி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து என்ட்ரி கொடுத்த நடிகை ஷ்ரத்தா கபூர் தான்.
முதல் படமே அவருக்கு தோல்வியை கொடுக்க 2013ம் ஆண்டு அவர் நடித்த ஆஷிகி 2 படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.
அப்படத்திற்கு பின் ஏக் வில்லன், ஹைதர், பாகி, சிச்சோர், ஸ்ட்ரீ மற்றும் ஜுதி மைன் மக்கார் உட்பட பல வெற்றிகரமான படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ் வைத்துள்ள இந்திய நட்சத்திரங்களில் ஒருவராகவும் உள்ளார்.
தற்போது, இவரின் சிறு வயது போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.