சிறு வயதில் மிகவும் அழகாக உள்ளாரே .. இந்த பிரபல நடிகை யார் தெரிகிறதா?
சிறு வயது புகைப்படங்கள்
சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் 'கஜினி' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'வனமகன்' படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக வலம் வந்தார்.
நடித்த முதல் படத்திலே நல்ல வரவேற்பை பெற்ற இவர் தொடர்ந்து சில படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஒரு படத்தில் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் போது காதல் ஏற்பட்டு பின் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகளும் உள்ளார்.
அவருக்கு என்று தனியாக இன்ஸ்டா பக்கம் வைத்து நிறைய புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
அட இவரா
திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகி குடும்பத்தை கவனித்து கொண்டு இருக்கும் இவர் வேறு யாருமில்லை நடிகர் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா தான். இவருடைய சிறு வயது புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
