அமரன் படத்திற்கு முன்பே முகுந்திற்கு படத்தில் மரியாதை செலுத்திய முன்னணி நடிகர்.. யார் தெரியுமா

Bhavya
in பிரபலங்கள்Report this article
அமரன்
சென்னையில் பிறந்து நாட்டின் மீது உள்ள பற்றின் காரணமாக 2006 - ம் தேதி இந்திய ராணுவத்தில் இணைந்து 2014 - ம் ஆண்டு வரை பணிபுரிந்தவர் தான் மேஜர் முகுந்த் வரதராஜன்.
நாட்டிற்கு பெருமை சேர்த்து வீர மரணம் அடைந்த இவரின் உண்மை கதையை வைத்து தான் கடந்த அக்டோபர் 31 - ம் தேதி அமரன் திரைப்படம் வெளிவந்தது.
ரங்கூன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதில், மேஜர் முகுந்த் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் முகுந்த் மனைவி இந்து கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவியும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
முன்னணி நடிகர்
இந்நிலையில், அமரன் திரைப்படம் வெளியாவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே முகுந்த் வரதராஜனின் பெருமையை பறைசாற்றும் வகையில் நடிகர் ஒருவர் செய்த செயல் குறித்து உங்களுக்கு தெரியுமா?
ஆம், தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவரான அர்ஜுன் கடந்த 2014 - ம் ஆண்டு ஜெய்ஹிந்த் இரண்டாம் பகுதியின் இசை வெளியீட்டு விழாவிற்கு மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தாரை அழைத்து அவர்களை பெருமை படுத்தி உள்ளார்.