இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா.. பல கோடி சொத்துக்கு அதிபதி
நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருவதை நம்மால் காணமுடிகிறது. அந்த வகையில், தற்போது ஒரு நடிகையின் புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அட இவரா
அவர் வேறு யாருமில்லை உலக அழகி என்ற பட்டம் பெற்று அப்படியே பாலிவுட் பக்கம் வந்து ராஜ்ஜியம் செய்து கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தான்.

தமிழில் இவர் விஜய்யுடன் 'தமிழன்' என்ற ஒரே படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். பின்,பாலிவுட் பக்கம் சென்ற இவர் அங்கு அதிக படங்கள் நடித்தார்.
அதில், நிறைய ஹிட் படங்கள் கொடுத்தாலும் பிரியங்கா சோப்ரா மெல்ல மெல்ல ஓரம்கட்டப்பட்டார். ஆனால் அவர் தனது திறமையை நிரூபிக்க நிறைய இடங்கள் இருப்பதை புரிந்துகொண்டு அப்படியே ஹாலிவுட் பக்கம் சென்றவர் தொடர்ந்து அங்கு படங்கள் நடித்து வருகிறார்.

படங்கள், விளம்பரங்கள், சமூக வலைதள பதிவுகள், சொந்த தொழில் என பல வகையில் சம்பாதித்தும் வருகிறார். மில்லியன் கணக்கான டாலர்களில் சம்பளம் பெறும் இவர் ஒரு பிராண்டுக்கு ஒப்புதல் அளிக்க அல்லது விளம்பரப்படுத்த குறைந்த பட்சம் 5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் பெருகின்றாராம்.
தற்போது, பணக்கார நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பிரியங்கா சோப்ராவின் சிறு வயது புகைப்படம் தான் வைரலாகி வருகிறது.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    