சினிமாவில் நாயகியாக என்ட்ரி ஆகும் நடிகை தேவயானி மகள்... யாருடைய படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நாயகியாக கலக்கியவர் நடிகை தேவயானி.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நிறைய திரைப்படங்கள் நடித்துள்ளார். அலட்டிக்கொள்ளாத நடிப்பு, குடும்ப பாங்கான கதை என நடித்து இப்போதும் மக்களால் கொண்டாடப்படும் நடிகையாக உள்ளார்.

இவரது திரைப்பயணத்தில் பெரிய ரீச் கொடுத்தது என்றால் காதல் கோட்டை, சூர்ய வம்சம், ஃபிரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களை கூறலாம். சின்னத்திரையில் களமிறங்கியவருக்கு கோலங்கள் சீரியல் தேவயானிக்கு மக்களிடம் மிகப்பெரிய இடத்தை பெற்றுத்தந்தது.
மகள் என்ட்ரி
நடிகை தேவயானி மகன் இனியா பாடும் திறமை கொண்டவர், இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் போட்டிபோட்டார், ஆனால் இறுதிவரை வரவில்லை. தற்போது தேவயானியின் இளைய மகள் பிரியங்கா நாயகியாக என்ட்ரி கொடுக்க உள்ளார்.

தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற கோர்ட் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. அப்படத்தை தியாகராஜன் இயக்க பிரசாந்த் வழக்கறிஞராக நடித்துள்ளாராம்.
தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசனின் மகன் ஹிருத்திக் மற்றும் நடிகை தேவயானி மகன் பிரியங்கா ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். படத்திற்கு தற்போது ரஞ்ஜன் என பெயரிடப்பட்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.