ஜீ தமிழ் சூப்பர்ஹிட் சீரியலில் நடிகை கெளதமி.. வெளிவந்த அதிரடியான வீடியோ
நடிகை கெளதமி
தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் கெளதமி. ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஆனால், ஒரு கட்டத்திற்கு தொடர்ந்து படங்கள் நடிக்காமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 1998ல் சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், அடுத்த ஆண்டே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவருக்கு ஒரு மகள் உள்ளார்.
சூப்பர்ஹிட் சீரியலில் கெளதமி
சினிமா மட்டுமின்றி தற்போது அரசியலிலும் களமிறங்கியுள்ளார் நடிகை கெளதமி. இந்த நிலையில், வெள்ளித்திரை நாயகியாக வலம் வந்த கெளதமி தற்போது சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் துவங்கி சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் மனசெல்லாம். இந்த சீரியலில் முக்கிய கட்டத்தில், கேமியோ ரோலில் நடிக்க வந்துள்ளார் நடிகை கெளதமி. அதற்கான promo வீடியோ வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..