மெட்டி ஒலி, ரோஜா சீரியல் நடிகை காயத்ரியின் அண்ணன் ஒரு நடிகரா?- எத்தனை பேருக்கு தெரியும்
ரோஜா, மெட்லி ஒலி
90களில் மிகவும் தரமான நல்ல கதையுள்ள எதார்த்தமான சீரியல்கள் பல ஒளிபரப்பாகின. அதுபோன்ற நல்ல கதைக்களத்தில் நடித்த பிரபலங்கள் முகம் இப்போதும் ரசிகர்களுக்கு மனதில் பதிந்திருக்கும்.
அப்படி ஹிட்டான ஒரு தொடர் என்றால் அது மெட்டி ஒலி தான், கொரோனா காலத்தில் மறுஒளிபரப்பு ஆனது. அதில் சரோ என்ற வேடத்தில் நடித்து மக்களிடம் பிரபலம் ஆனார் காயத்ரி, சூப்பர் ஹிட் ரோஜா சீரியலிலும் நடித்திருந்தார்.
அதேபோல் இவர் அஜித்திற்கு ஜோடியாக ராஜாவின் பார்வையிலே படத்திலும் நடித்திருப்பார்.
சகோதரர் யார்
இவர் இன்ஸ்டாவில் தனது அண்ணன் சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்தார். அதைப்பார்த்த ரசிகர்கள் இவரா உங்கள் அண்ணன் என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
இவர் ரஜினி கதை எழுதி, தயாரித்து சிறப்பு வேடத்தில் நடித்த வள்ளி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த், மீனா உள்ளிட்டோர் நடித்த சேதுபதி ஐபிஎஸ் படத்திலும் சஞ்சய் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் புகழ் அமீரின் முதல் திரைப்படம்- வெளிவந்த போட்டோ