பிரபாஸின் 'ஸ்பிரிட்' படத்தில் இணையும் விஜய் பட நடிகை.. வேற லெவல் தகவல்!
ஸ்பிரிட்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவிருக்கும் படம் ஸ்பிரிட். இப்படத்தில் முதன் முதலில் தீபிகா படுகோன் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
பின் சில காரணங்களால் தீபிகாவை படத்திலிருந்து இயக்குநர் சந்தீப் வங்கா நீக்கிவிட்டார். அவருக்கு பதிலாக அனிமல் பட நடிகை திருப்தி டிம்ரி கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மட்டுமில்லாமல் ஜப்பானீஸ், மாண்டரின், கொரிய மொழிகளிலும் வரப்போவதாக தெரிகிறது.
வேற லெவல் தகவல்!
இந்நிலையில், மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் 'ஸ்பிரிட்' படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இவருக்கு இரண்டாவது கதாநாயகி கதாபாத்திரமா? அல்லது அது ஒரு எதிரி கதாபாத்திரமா? என்பது இன்னும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.